கல்வி என்பது ஏட்டறிவை தாண்டிய பட்டறிவு என்பதனை சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்ணமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் உமா , முதல்வர் சரவணனுக்கு சென்னை ஒய் எம் சி எ , ஸ்கூல் வாய்ஸ் அசோசியேசன் சார்பான ஐகானிக் எஜூகேசன் எக்சலன்ஸ் அவார்டு 2026 விருதானது தமிழக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வழங்கி சிறப்பித்தார்.

சென்னை வேப்பேரியில் ஒய் எம் சி எ யில் தமிழ்நாடு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் , தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுகன்யா ஆகியோர் தலைமையிலும் ஒய் எம் சி எ யின் ஜெனரல் செக்ரட்டரி ஆசிர் பாண்டியன், சேர்மன் ஆல்பர்ட் பெர்னான்டோ, ஸ்கூல் வாய்ஸ் அசோசியேசன் ஸ்டேட் பிரசிடென்ட் மார்டின் கென்னடி, ஸ்டேட் ஜெனரல் செக்ரட்டரி ஜான் ஆரோக்கிய பிரபு ஆகியோரின் முன்னிலையில் விழா சிறப்புடன் நடைபெற்றது.
விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் தனியார் பள்ளிகளின் தாளாளர் , முதல்வர்களுக்கு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஆளுமையை தன்னகத்தே கொண்டு பள்ளியை நடத்தி வரும் தாளாளர் உமா, முதல்வர் சரவணன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கிராமத்து மாணவர் – மாணவியர்களை நகர்புற மாணவர் — மாணவியர்களுக்கு இணையான கல்வியை சிறப்பாக வழங்கி வருபவர்களும், விருது பெற்ற ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் உமா, முதல்வர் சரவணனை கல்வி துறையினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வி – சமூக ஆர்வலர்கள் , நகரின் முக்கிய பிரமுகர்கள், என பல்வேறு தரப்பினரும் பாராட்டிய வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் /. எதிரொலி . இன்
