ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில், கல்லூரி முதல்வர் அ.அறிவழகன் அனைவரையும் வரவேற்றார்.


பரமக்குடி சார் ஆட்சியர் மரு. ச. வினோதினி புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்து,புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாமின் முக்கியத்துவம் குறித்துப் பேசியதோடு,புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டார்.பரமக்குடி தாசில்தார்,துணை தாசில்தார் வருவாய்த்துறையினர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கல்லூரியின் கண்காணிப்பாளர் பா.ராம்பிரவின் நன்றி கூறினார். முகாமில் 250 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை கல்லூரியின் மை பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா து.பாரதி சிறப்பாக செய்திருந்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed