மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் ஏடகநாதர் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலும் இதே ஊராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று பாலம் தேனூர் பிரிவு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் பேருந்துகள் நின்று செல்ல பெண்கள், பள்ளி மாணவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரண்டு நிறுத்தங்களிலும் பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆண்டு நிழல் குடைகள் கட்டப்பட்டது. சுமார் 10 லட்சம் மதிப்பில் இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் 20 லட்சம் செலவில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக வயதான பெண்கள், பள்ளி மாணவ – மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

திருவேடகத்தில் வைகை ஆற்றிற்கு செல்லும் பாதை எதிர்ப்புறம் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். சுமார் 50 மீட்டர் தூரமுள்ள நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தேனூர் பிரிவு வைகை ஆற்று பாலம் அருகில் உள்ள நிழற்குடை இருக்கும் இடத்திற்கு 50 மீட்டர் தொலைவில் பேருந்துகளை நிறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்வதால் சுமார் 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேருந்து நிழல்குடைகளும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

நிழற்குடை பகுதியில் அமர்ந்திருக்கும் வயதானவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து வந்தவுடன் ஓடி சென்று ஏறிசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துகளை தவறவிடுவதால் தாமதமாக பள்ளிக்கு செல்வதுடன் தங்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். சுமார் 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வயதான பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த இரண்டு பயணிகள் நிழற்குடை முன்பும் பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா அவர்கள் இந்த பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நின்று செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed