ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் தொடர்கிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் 66 வயதான விஜயகுமார் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘சுவாகத்’, ‘ஹான்ஸ்’, ‘விமல்’ உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 10,000 பாக்கெட்டுகள் (30 கிலோ) போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த உயர்ரக பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே 30 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல். 66 வயதுடைய நபர் கைது.ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நடவடிக்கை.
__
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுகுறுதொழிற்சாலைகள் இயங்குகின்றன.