காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் டி.எஸ் கனெக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் இன்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.


வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உணவு நச்சுத்தன்மை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கேண்டினில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், இந்த நிறுவனத்தில் நிலம் தொடர்பான பிரச்சனைகள், தொழிலாளர் நலன் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் முறையாக கையாளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு நச்சுத்தன்மைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோட்டஸ் லட்சுமிகாந்தன்.இ காஞ்சிபுரம் / 94875 48077 எதிரொலி / 8939476777
