நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய ஜெப கூடாரத்தில்’  இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு பிரார்த்தனை  நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர்.

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோதரர் மோகன் சி.லாசரஸ், தேவ செய்தி கொடுத்து தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார். படிப்பிற்கான ஆலோசனை, சாதனையாளர்களின் அனுபவ சாட்சி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இதில் சிறப்பு பிராத்தனைக் கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் பொது மேலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

நெல்லை செய்தியாளர் : செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed