சிவகங்கையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் இடையமேலூரை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில்
உள்ளது மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி உறைவிடப் பள்ளி, இந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தேசிய காகித பை தினம் கொண்டாடப்பட்டது.

இந்த தினத்தை முன்னிட்டு மாணவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கோர்ட் வாசல் வரை நெகிழி ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை நடத்தினர்கள். பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அவர்கள் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

அப்போது நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, காகிதப் பைகள் மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் பேரணியை நடத்தினார்கள்.

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பள்ளியின் மழலையர் வகுப்பு மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் தாங்களே தயாரித்த காகிதப் பைகளை சிறப்பு விருந்தினர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார்கள். மேலும், நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து, காகிதப் பைகள் மற்றும் துணிப் பைகளின் பயன்பாட்டை ஊக்குவித்து தொடர்ந்து கடைப்பிடிப்பதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இப்பேரணியின் நிறைவு நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், சிவகங்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்.சுகுமாரன், சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜி.கண்ணதாசன்
(மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம்), மற்றும் சிவகங்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , எல். ஃபிரான்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed