திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த குளத்துமேடு கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம்,வாரணாசி எனப்படும் காசியில் கங்கை நதி ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் போன்று ழவேற்காடு அடுத்த குளத்துமேட்டில் கங்கை நதி போல விரிந்த பெரிய குளத்தின் அருகே எழுந்தருளியுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலானது அதனை ஒற்று அமைந்துள்ளது.

வாரணாசி காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதே ஒத்த திசையுடைய அருள் உடைய பழவேற்காடு ஸ்ரீ காசி விஸ்வநாதரை வழிபடும்போது காசிக்கு சென்ற பயனை அடையலாம். மேலும் ராமேஸ்வரத்திற்கு செல்ல முடியாதவர்கள் இங்கு உள்ள கடற்கரை கோயிலான சிந்தாமணீஸ்வரர் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை நிறைவடைய செய்யலாம்.
காசி முதல் ராமேஸ்வரம் என்னும் அதே நிலையை பழவேற்காடு குளத்துமேடு மேடு முதல் சிந்தாமணி ஈஸ்வரர் கோயில் வரை என்ற நேர்த்தி கடனோடு இந்த ஆலயத்தை வழிபடுகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருக்கோயில் புனரமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கணபதி ஓமம் தொடங்கி நான்கு கால பூஜைகளுடன் பூர்ணாஹுதி நடைபெற்று கடம் புறப்பட்டு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் கோபுரத்திற்கும் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத
ஸ்ரீ காசி விஸ்வநாதருருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எனும் திருமந்திரத்தை ஒலித்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிராம நிர்வாகிகள் பி.எஸ் பழனியப்பன், பி.கே.பாண்டியன், பி.டி.சீனிவாச காந்தி,பி.எம் பாஸ்கர் என்.எஸ்.முத்து ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

சர்வ சாதகர் நித்தியானந்தா சிவாச்சாரியார் தலைமையில் ஆலய கும்பாபிஷேக வழிபாட்டு பணிகள் நடைபெற்றது.
செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476888
