சமீபத்தில் இளையராஜா, சுதந்திரப் போராட்ட தியாகி, ஐயா மாயாண்டி பாரதி அவர்களைப் பற்றி மிகவும் தவறான கீழ் தரமான வகையில், ஒரு தகவலை சொல்லி இருந்தார் அதில், “ஐயா மாயாண்டி பாரதி அவர்கள் அவருடைய வீட்டில், எங்களுக்கு ஒரு அறையை வாடகைக்கு விட மறுத்ததார்.” என கூறி, அவரை கலங்கப்படுத்தி பேசி இருக்கிறார்.

அது குறித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது ;

இளையராஜா சொல்வது, தவறான தகவல்… “என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”

இப்படியெல்லாம் பொய் சொல்ல உமக்கு எப்படிய்யா மனசு வந்தது ராசய்யா..? இப்படியெல்லாம் நன்றிகெட்ட தனமாக சிலர் பேசக்கூடும் என்பதற்காகவே எம் வள்ளுவன் இந்தபாடலை இயற்றியிருக்கிறார் உமக்காகவே.

இந்த வள்ளுவர் வரிகளை நீர் படிக்க வில்லையா நன்றி கொன்ற ராசைய்யா..?

ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் இன்றைய இளையராசாவின் உண்மைப் பெயர் ராசையா தான்.
கங்கை அமரனின் பெயர் அமர்சிங். அட மாங்கா மடையரே ராசைய்யாவே..!
இப்போது நீங்களும் உனது தம்பிகளும் ஒரு செழிப்பான வாழ்வை வாழ்வதற்கு அடிப்படைக் காரணமே தோழர் ஐ.மாயாண்டி பாரதி என்கிற , 14 வருட வெள்ளை அரசின் சிறைத் தண்டனை அனுபவித்த விடுதலைப்போரில் வீழ்ந்து விட்ட அந்த ஐ மா பா என்கிற மார்க்சிஸ்ட் தோழர் தானே..?

நீங்கள் இசையமைப்பதற்காக வாங்கிய தபேலாவும், மிருதங்கமும், அர்மோனியப் பெட்டியும் கம்யூனிஸ்ட் தோழர்கள் 1969 ல் கேரளா பீரிமேடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ,
தோழர்கள் துண்டேந்தி வசூல் செய்து மார்க்சிஸ்ட் கட்சி வாங்கி தந்தது தானே..ராசைய்யா..?

அந்த பெட்டியில் தான் உன் மூத்த அண்ணணும் மகத்தான கட்சிப் பாடகருமான மக்கள் பாடகன் தோழர் பாவலர் வரதராஜன் அவர்கள் இசையமைத்து பலநூறு பாடல்களைப் பாடினார். உனது இன்னொரு அண்ணன் பாஸ்கரன் மிருதங்கமும், தம்பி கங்கை அமரன் தபேலாவும், நீங்கள் பெண் குரலுக்கான பாடகராகவும் வாசித்தும் கட்சிக்காக பிரச்சார கூட்ட மேடைகளில் பாடியும் வந்தது தானே உண்மை..?
உங்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் துண்டேந்தி வசூல் செய்து உங்கள் குடும்ப கஷ்டத்தை தீர்த்தது வரலாறல்லவா..?

சாதிமதம் கடந்து விடுதலைப் போரில் வீழ்ந்து உழைக்கும் மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு ஆளுமையை சாதிச் சிமிழில் அடைக்க நினைத்து , அபாண்டமாக பழி சுமத்தி உண்மைக்கு புறம்பாக பச்சை பொய்சொல்லும் அகங்காரம் கொண்ட அற்ப பதரே…!

உமக்குப் பணம் வந்து விட்டதால், புகழ் வந்து விட்டதால் மனிதத்தன்மையும் திமிரும் அகங்காரமும் கூடவே வந்து விட்டதை எண்ணி உன்னை சார்ந்தவர்களே வெட்கப்படுவதும், காறி உமிழ்வதும் உமக்குத் தெரியுமா கர்வம் தலைக்கேறிய கயவனே..?

இன்று உங்களுக்கும் பெயரும், புகழும், பணமும், சொத்துக்களும் வரக்காரணமாக அமைந்த அந்த எளிமையான கம்யூனிஸ்ட் தியாகியை களங்கப்படுத்துவதில் உமக்கு அப்படி என்னய்யா திருப்தி..?

கொசுறு செய்தி.

தோழர் மாயாண்டி பாரதிக்கு வாரிசு இல்லை. அதைப்பயன்படுத்தி, “உங்கள் வீட்டை எனக்கு எழுதிவையுங்கள் என்று இளையராசா கேட்டதும் ,
அதற்கு தோழர் ஐயா முனியாண்டி பாரதி அவர்கள் மறுத்து, வீட்டை அவருக்கு எழுதி கொடுக்காததற்கும் தான் இந்த கேவலமான எதிர்வினையாற்றி பேசுகிறார்” நன்றி கெட்ட ராசய்யா…
என, மிகவும் கோபமாக தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed