வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கூட நகரம் ஊராட்சி வெற்றி நகர் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகளுக்கு அருகே 10 மீட்டர் தொலைவில் கடைஎண்.11244 தமிழக அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடை உரிமையாளர் ரவி என்பவர் தனது மனைவி பெயரில் மனை வாங்கி கட்டடம் கட்டி, அதன் மூலம் தமிழக அரசிடம் வாடகை பெற்று வருகிறார்.

குறிப்பாக, இரவு நேரங்களில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை அந்த மதுபான கடையில் விற்பனை நடைபெறுவதால், அந்த வழி செல்லும் பொதுமக்கள் மிகவும் பயந்து, பயந்து மன வேதனையோடு அந்த வழியில் சென்று வருகிறார்கள். அதே வழியில் தான் பள்ளிக்குச் சென்று வரும் மாணவ மாணவிகளும் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தோடும் பயத்தோடும் அந்த மதுபான கடையை கடந்து சென்று வருகிறார்கள்.
இது குறித்து, ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி அவர்களிடம் மன வேதனையோடு அப்பகுதி மக்கள் கூறினார்கள். பொதுமக்கள் நலனை கருதி, இன்று காயிதே மில்லத் குறை தீர்வு நாள்கூட்டரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் இதே பிரச்சனை குறித்து பாபாஜி மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வேலூர் செய்திகள் ; மூர்த்தி எதிரொலி / 8939476777
