குழந்தை தொழில் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரசு சார்ந்த பல்துறை அதிகாரிகளுடன் முன்னெடுப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி அயோத்தியாபட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் குழந்தை உரிமைகளும் நீங்களும், சேலம் மக்கள் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அயோத்தியாபட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தழகன், வட்டார கல்வித்துறை அலுவலர் நெடுமாறன், வட்டார கல்வி வள அலுவலர் அறிவழகன், வட்டார சமூக நல அலுவலர் பிரபா, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பிரபு, மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் நேரு, சேசன் சாவடி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, குழந்தைகள் பாதுகாப்பு காவல்துறை அலுவலர் புவனேஸ்வரி, குழந்தைகள் நல ஆர்வலர் ராமு, ஒருங்கிணைந்த வட்டார வளர்ச்சி மேற்பார்வையாளர் சாந்தி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மக்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கபிரியேல் அனைவரையும் வரவேற்று பேசினார். குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான கிறிஸ்துராஜ் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.
சேலம் மக்கள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதை ஒழிக்கவும் விரைவான உறுதியான நடவடிக்கை எடுக்கவும் சமூகம் பல்சார் அரசு துறைகளுக்கு பொறுப்பும் கடமையும் உண்டு என்று பேசினார்

மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் துறை சார்ந்து குழந்தைகளை குழந்தை தொழில் முறையில் இருந்து மீட்டெடுத்து அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்யும் வகையில் கலந்துரையாடல் செய்தனர். இறுதியாக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாளர் அலமேலு நன்றி கூறினார்.

சேலம் செய்தியாளர் /
கா. தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777
