14.11.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு, வ.உ.சி ஒருங்கிணைப்பு குழு-கன்னியாகுமரி சார்பாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி மாணவி பூவிகா 6-8 பிரிவில் முதல் பரிசு ரூபாய் 10,000 தொகையும்,சான்றிதழையும் பெற்றார்.

மேலும் மற்றொரு மாணவி துர்கா என்பவர் 11-12 பிரிவில் முதல் பரிசு ரூபாய் 10,000 தொகையும், சான்றிதழையும் பெற்றார்.
பாரதிதாசன் அகாடமி செயலாளர் பாவலர் சி.சூர்யா மாணவியர்களுக்கு பயிற்சி கொடுத்து வழி நடத்தினார்.
பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா மாணவியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
