திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் இன்று திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.அறிவழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்  அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி  குறித்தும் மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தவேண்டம் , இடை நிற்றலை முழுமையாக கண்காணித்து 100 % விழுக்காடு வருகையை உறுதி செய்ய வேண்டும் , மாணவர்களுக்கு தினம்தோறும் பயிற்சி தேர்வு நடத்தவேண்டும் , பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், காலை உணவு மற்றும் மதிய உணவை காண்காணித்து மாணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார், பத்தாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்கள் ஒவ்வொருவாக அழைத்து பாடம் எடுக்கும் முறையை ஆய்வுசெய்தார் அப்போது தலைமை ஆசிரியை மலர்கொடி  , முதன்மைக் கல்வி அலுவலக பள்ளிகள் துணை ஆய்வாளர் குமரவேலன், உதவி தலைமையாசிரியை பாகிரதி சாரதி , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன்  உடன் இருந்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed