தொழிற்சாலையில் அன்றாடப் பணிக்கு பயன்படும் கருவிகளையும், இயந்திரங்களையும் வைத்து ஆயுத பூஜை விழாயை கோலாகலமாக கொண்டாடிய ஹூண்டாய் நிறுவனம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் , ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Limited) நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில், ஆயுத பூஜை விழா ஊழியர்களின் பக்தி மற்றும் உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


நிறுவனத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பேணவும், ஊழியர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த விழா வழிவகுத்தது.
விழாவை முன்னிட்டு, தொழிற்சாலை வளாகம் முழுவதும் வண்ணமயமான மலர்கள் மற்றும் மாவிலைத் தோரணங்களால் எழிலுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்களது அன்றாடப் பணிக்கு பயன்படும் கருவிகளையும், இயந்திரங்களையும் பூஜித்து நன்றியுணர்வை வெளிப்படுத்தினர்.


இந்நிகழ்ச்சியில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தருண் கார்க், முழுநேர இயக்குநரும் தலைமை உற்பத்தி அதிகாரியுமான எம்.எஸ்.முகுந்தன் மற்றும் நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைவர்களின் வருகை விழாவிற்கு கூடுதல் பெருமையையும், ஊழியர்களுக்கு உற்சாகத்தையும் அளித்தது.


தொழிலையும், உழைப்பையும் போற்றும் வகையில் அமைந்த இந்த ஆயுத பூஜை கொண்டாட்டம், ஹூண்டாய் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியையும் புதிய புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது.
செய்திகள் : லக்ஷ்மி கந்தன் / எதிரொலி . இன் / 8939476777
