ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , தமிழ்நாடு வனம் , வனஉயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவின் சார்பில் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் வனஉயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கடல்வாழ் வனஉயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு , வனஉயிரினக் குற்றங்களைத் தடுப்பதில் மாணவர் - மாணவியர்கள் , பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாணவர்- மாணவியர்களின் படைப்பாற்றல், அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம், கட்டுரை, பேச்சு , வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் ஏராளமான மாணவர், மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கடல் என்பது எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடமாகவும், சுற்றுச்சூழல் சமநிலையின் முக்கிய அங்கமாகவும் விளங்குவதால், கடல்வாழ் வனஉயிரினங்களைப் பாதுகாப்பதன் மூலம் கடல் வளத்தையும், சுற்றுச்சூழலையும், எதிர்கால தலைமுறையையும் பாதுகாக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு, மாணவர் - மாணவியர்கள் , பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 144 பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டுச் சான்றிதழ்கள் , கேடயம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி , பயிற்சி துணை ஆட்சியர் பி. சினேகா , மாவட்ட வன அலுவலர் ரா.மகேந்திரன் , தமிழ்நாடு வனம் , வனஉயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு (ராமநாதபுரம் மண்டலம்) துணை இயக்குநர் அ.சதீஷ்குமார் , ராமநாதபுரம் உதவி வனப்பாதுகாவலர் கோபிநாத் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி, பள்ளித் தலைமையாசிரிய பெருமக்கள், ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed