தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 55 ஆவது ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு நகர் கழக செயலாளர் முத்துராஜ் தலைமையிலும் ஏற்பாட்டிலும் கழக மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரபிரபா முத்தையா, வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திநடேசன், மாவட்ட பேரவை துணை செயலாளர் தர்ம ராஜா மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்,கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 55 ஆவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed