நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாதனை! விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம்! சாலை விபத்துக்கள் ஏற்பட்டு ‘உயிரிழப்பு’ ஏற்பட்டால், அதிகாரிகளின் சொந்தப் பணத்திலிருந்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுகோள்!
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் முதல் மேலப்பாளையம் கருங்குளம் வரை அம்பை. நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணி நீண்ட காலமாக அரைகுறையாக நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கப்பணி எல்லா இடங்களிலும் ஒரே அளவு நடைபெறாமல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சில இடங்களில் கூடுதலாகவும், ஒரு சில இடங்களில் குறைவாகவும் சாலை அகலப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணி முழுமையாக நடைபெறாத நிலையில் ஏற்கனவே உள்ள நல்ல சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ‘கிளறி விட்டு’ பல மாதங்கள் பல ஆகிவிட்டன. ஆனால், சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு தொண்டப்பட்ட சாலைகளும் சரியாக செப்பனிடப்படவில்லை.
எனவே பாளையங்கோட்டை குலவணிகர்புரம் முதல் ரிலையன்ஸ் பங் வரை ஆங்காங்கே சாலைகளில் பழுதடைந்து மரண குழிகள் காணப்படுகின்றன. இந்த மரண குழிகளில் வாகன ஓட்டிகள் விழுந்து “சாலை மரணம்” ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அம்பை. நெடுஞ்சாலையின் நடுவில் “நவீன குரோட்டன்ஸ் செடி” அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இத்தகைய சாதனையை நெல்லை மாவட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்?

மேலும், மேலப்பாளையம் அம்பை. நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முதல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா வரை உள்ள நெடுஞ்சாலை பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு மிகவும் பரிதாபமாக உள்ளது. இத்தகைய நெடுஞ்சாலையைப் பேணுவதற்கு பலதரப்பட்ட நிலையில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள்? அவர்களுக்கு அரசு வாகனம், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் மற்றும் சலுகைகள் பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவது எதற்கு? என்று நெல்லை மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இத்தகைய சாதனை பணிக்கு? தமிழ்நாட்டு இளைஞர்களின் அண்ணன், தாய்மாமன் என்ன பதில் சொல்லப் போகிறார்? என நெல்லை மாவட்ட மக்கள் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்! இத்தகைய பரிதாபமான சாலையில் பயணம் செய்து சாலை விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் மற்றும் சலுகைகள் பெறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் “சொந்த பணத்தில் இருந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மிகவும் பரிதாபமான நெடுஞ்சாலையை வைத்துக்கொண்டு, அதை சரியாக பராமரிக்காத நிலையில், “லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விபத்துகளைத் தடுக்க கவனமாகச் செல்வோம்” என்று வைத்துள்ள விளம்பரப் பலகைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை! மரணக் குழிகள் இல்லாத சாலையை அமைக்காமல், இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரப் பலகை வைப்பதினால் என்ன பயன்? இந்த விழிப்புணர்வு விளம்பரப் பலகைக்கு செலவாகும் செலவை வைத்து தரமான சாலை அமைக்கலாமே? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்!
செய்தியாளர் : செ.பா.தவசிக்கனி
எதிரொலி . இன் / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 8825850212
