வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தன கொண்ட பள்ளி ஊராட்சி செயனகுண்டா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர் அதில் நாங்கள் இந்த கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக 400 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விளையாடுவதற்காக ஒரு மைதானம் இருந்து வருகிறது.
குறிப்பாக, அந்த மைதானத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து பயன்படுத்தி வருகிறோம். எங்கள் கிராம இளைஞர்கள் அந்த மைதானத்தில் பயிற்சி எடுத்து 15 பேர் ராணுவத்திலும், நான்கு பேர் காவல்துறையிலும் பணியாற்றி வருகிறார்கள். வருங்காலத்தில் இளைஞர்கள் இந்த மைதானத்தை பயன்படுத்தி ராணுவத்திலும் காவல்துறையிலும் அரசுத்துறை அதிகாரிகளாகவும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது தமிழக அரசு இளைஞர்களுக்கு மற்றும் மாணவ மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் பல சாதனைகள் புரிவதற்கு உதவி வருகிறது .

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் இலவச வீட்டு மனை வழங்க அந்த மைதானத்தை ஒட்டி உள்ள சுமார் 30, ஏக்கர் ஊர் நத்தம் நிலத்தை இலவச வீட்டு மனைக்காக அளந்து வருகிறார்கள். தற்போது நாங்கள் பயன்படுத்தி வரக்கூடிய மைதானத்தையும் சேர்த்து அளக்கிறார்கள். குறிப்பாக எங்களுக்கு விளையாட்டு மைதானத்திற்கு தேவைப்படக்கூடிய அளவை தவிர்த்து நீங்கள் அலந்து கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருந்தனர்
கிராம மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவலை கூறி விசாரணை செய்துமனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி
