நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்கள் மற்றும் வீடுகளில் வண்ண மயமான கொலு பொம்மைகளை வைத்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஸ்ரீராம் என்பவரது தாயார் திருமதி சியமளா ரவிந்திரன் என்பவர் கடந்த நான்கு தலைமுறைகளாக நவராத்ரி பண்டியை முன்னிட்டு நமது பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக வீட்டில் படிகள் அமைத்து வண்ணமயமன கொலு பொம்மைகள் வைத்து உள்ளார்

இதில் படிகளில் பொம்மைகள் மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியை காட்டும் பொம்மைகள் விலங்குகள், தாவரங்கள், மேல் படியில் – மனிதர்கள், மகான்கள்,
மரப்பாச்சி பொம்மைகள் மரத்தால் செய்யப்பட்ட பழமையான பொம்மைகள்,களிமண் பொம்மைகள்: பாரம்பரிய கைவினை பொம்மைகள்,நவீன பொம்மைகள்: கிரிக்கெட் வீரர்கள், சமூக கருத்து பொம்மைகள், சேவல் சண்டை, கிராமிய திருவிழா என தத்ரூபமான பொம்மைகள், நேரு பூங்கா மற்றும் காவல் தெய்ங்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பபடு பிரசாதங்களும் வழங்கப்பட்டது

இது குறித்து பேசிய திருமதி சியாமளா கடந்த 35 ஆண்டுகளாக நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகிறோம். இதில் நவராத்திரி 9 நாட்களும் வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்கும். தினமும் விளக்கேற்றி பாடல்கள் பாடுவதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். குடும்ப ஒற்றுமை:
கொலு படி அமைப்பது முதல் பொம்மைகளை அடுக்குவது வரை குடும்பமே சேர்ந்து செய்வதால், குடும்ப உறவு பலப்படும்.

குழந்தைகளுக்கு கல்வி:
ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு புராண கதை உண்டு. ராமாயணம், மகாபாரதம், தசாவதாரம் கதைகளை குழந்தைகள் விளையாட்டாக கற்றுக் கொள்வார்கள்.
இவ்விழாவில் உறவினர்கள், அண்டை வீட்டாரை அழைத்து வெற்றிலை, பாக்கு, சுண்டல் கொடுக்கும் போது சமூக உறவு வலுப்படும். பெண்களுக்கு இது ஒரு சமூக சந்திப்பு விழாவாகவும் உள்ளதோடு வண்ணவண்ண பொம்மைகளை அழகாக அடுக்கி, அதை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed