சென்னை கோயம்பேடு காவல் நிலைய தலைமை காவலர் சொந்த ஊருக்கு வந்த இடத்தில் திடீர் மரணம் அடைந்ததால் சந்தேகம் அடைந்த அவர் மனைவி போலீசில் புகார் செய்தார். இது பற்றிய விபரமாவது :

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ஜீவா நகரை சேர்ந்தவர் புனிதா. இவரது கணவர் சிவா, வயது 48) இவர் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சிவா மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஊரான மகாராஜபுரத்திற்கு வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து படுத்து உறங்கினார். சிறிது நேரத்தில் படுக்கையிலேயே இறந்து விட்டார். அதிகாலை மனைவி புனிதா கண்விழித்துப் பார்த்தபோது அசைவின்றி கிடந்தார். அவரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து புனிதா வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பணிச்சுமையால் இறந்தாரா அல்லது வேறு யாராவது நெருக்கடிக்கு பயந்து இறந்தாரா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed