தஞ்சாவூர் அருகே, வல்லம் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான கலைத் திருவிழா இளையோர் திறன் போட்டிகள் அக்டோபர் 7 மற்றும் 8 ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெற்றன.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு மாவட்ட அளவில் 32 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவ – மாணவிகள் தனி ஆட்களாகவும், அல்லது குழுக்களாகவும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலிருந்து வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் பங்கேற்கும் இப்போட்டிகளில், அவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில், புதன்கிழமை அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நடைபெற்ற கலைத் திருவிழாவில் சுமாா் 3,500 மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும், வியாழக்கிழமை அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நடைபெற்ற நிகழ்வில் சுமார் 2,500 மாணவ மாணவிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவ – மாணவிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஜிவி இரா. ரேவதி கலந்துரையாடி, அவர்களின் திறமைகளை பாராட்டினார்.

இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட அளவில் ஒற்றை பறை இசை கருவி வாசிப்பதில் சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா ஸ்ரீ மாவட்ட அளவில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றிருந்தார்.

அவர், தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு ஒற்றைப்பறை இசைக்கருவியை மிகவும் திறமையாக வாசித்து மாநில அளவில் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி பிரவீனா ஸ்ரீ அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிதா அவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சற்குணன் அவர்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் உட்பட மாணவியுடன் பயிலும் அனைத்தும் மாணவ, மாணவிகளும் மாணவி பிரவீனா ஸ்ரீ – க்கு வாழ்த்து சொல்லி பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed