சிவகாசியில் ஆர் பி. எஸ். கே. திட்ட வாகன வாடகை பில் வழங்க ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவகாசி மருத்துவ மாவட்ட துணை இயக்குனர்( சுகாதாரத்துறை) ஜெகவீரபாண்டியன் என்ற குணசேகரன் (வயது 59) நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார் இது தொடர்ந்து சுகாதாரத் தறை துணை இயக்குனர் ஜெகதீரபாண்டியன் விருதுநகர் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை மதுரை மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
