தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நடைபெற்ற த.மு.எ.க.ச. பயிற்சிப் பட்டறையில், ஓவிய ஆசிரியர் ஜெயபாரதி வரைந்த கோரிக்கை ஓவியத்தை, சிறார் எழுத்தாளர் உதயசங்கர் வெளியிட்டார் .
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் பெருங்குளம், பல்லுயிர்களின் முக்கிய வாழ்விடமாகவும் திகழ்கிறது.
பெருங்குளத்தின் சூழலியல் முக்கியத்துவத்தையும் பல்லுயிர் வளத்தையும் பாதுகாக்க, உரிய ஆய்வுகளின் அடிப்படையில் ராம்சர் தளமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த ஓவியத்தின் கோரிக்கை.

பெருங்குளத்தைப் பாதுகாப்போம் .
பறவைகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்போம். ராம்சர் அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்போம். ராம்சர் தளம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதி ஆகும். குறிப்பாக சைபிரியா நாட்டு காட்வீட் நீர்ப் பறவைகள் உள்பட பல வெளிநாட்டு பறவைகள், மீன்கள், தாவரங்கள் , பிற உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் , நீரியல், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட
ஈர நிலங்களை ராம்சர் தளமாக
ஆக அரசு அறிவிக்க வேண்டுமென பறவைகள் ஒத்துமித்த குரல் எழுப்பியது போன்று வண்ண ஓவியம் அமைந்துள்ளது.
பறவைகளின் எண்ணத்தை மனதில் நிலைநிறுத்தி கை விரல்கள் மூலம் ஓவியமாக பிரகாசிக்க செய்த ஓவிய ஆசிரியை, கவிஞானி ஜெயபாரதியை இயற்கை – பறவைகள் வளர்ப்பு – சமூக – ஆர்வலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்வதோடு, ஈர நிலங்களை ராம்சர் தளமாக அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வலியுறுத்திய வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி . இன் / 8939476777
