கன்னியாகுமரி மாவட்டம்.தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் மறுகால் ஓடையில் மலைப்பாம்பு ஒன்று இருப்பது அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
மலைப்பாம்பு பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதற்கு முன்பாக, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தைரியமாக செயல்பட்டு அதனைப் பாதுகாப்பாக பிடித்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் உத்தரவின் பேரில், வனவர் மணிகண்டன் தலைமையில் வனக்காவலர் பிரபீன், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தனுஷ் மற்றும் விஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடுவதற்காக பாதுகாப்பாக வைத்துள்ளனர். பள்ளி அருகே மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777
