கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி மற்றும் எஸ்,சி, எஸ், டி, பிரிவு சார்பில் தேசப்பிதா காந்தியின் பிறந்த நாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ரவுண்டனா அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவப்படம் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவப்படங்களுக்கு வேப்பனஹள்ளி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் எஸ்,சி,எஸ்,டி பிரிவு மாநிலச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி இங்கிலாந்து நாட்டில் வழக்கறிஞர் படிப்பை முடித்த அவர் தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சென்று வழக்கறிஞராக பணியாற்றிய போது அங்கு இந்தியர்களுக்கு எதிரான நிறவெறியை கண்டு அங்கு முதல் முதலாக சத்தியாகிரகம் போராட்டத்தை தொடங்கிய அவர் பின்னர் இந்தியவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையா ஈடுபடுத்திக் கொண்டு உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை துவங்கி இந்தியாவிற்கான சுதந்திரத்தினை போராடி பெற்றுதந்து கதர், கிராம பொருளாதாரம், எளிமையான வாழ்க்கையை வலியுறுத்திய காந்தியை டெல்லியில் கோட்சவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ரவீந்திரநாத் தாகூர் தான் அவருக்கு மகாத்மா” என்ற பட்டத்தை கொடுத்தார், தொடர்ந்து நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசத்தின் தந்தை மாத்மா காந்தி என்று முதலில் அழைத்தார். அன்று முதல், இன்று வரை நாடு முழுவதும் மகாத்மா காந்தியை தேசத்தின் தந்தையாக நாம் மகிழ்வித்து வருகிறோம்’ இந்த நன்நாளில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளினை நாம் கொண்டாடுவதில் பெரும் பாக்கியம் பெற்றுள்ளோம் என்று கிருஷ்ணமூர்த்தி மற்றும் மூர்த்தி ஆகியோர் புகழாரம் சூட்டினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முனியப்பன், ராமன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருண்குமார், இளைஞர் காங்கிரஸ் வட்டத்ணைத்தலைவர் ஷமீர், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளான வெங்கடேஸ், மாயாண்டப்பா உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
செய்திகள் மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
