வேலூர் மாவட்டம் கோவா எஸ். எஸ். கே. சிலம்பம் தற்காப்பு கலைகள் அகாடமி சார்பில், யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவாவில் கடந்த 27 ,28, தேதிகளில் நடைபெற்றது.


கராத்தே, சிலம்பம், யோகா, ஆகிய போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அதில், குடியாத்தம் தாழையாத்தம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழுவைச் சேர்ந்த 24 மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.


ஒற்றை கம்பு போட்டியில் 21, மாணவர்கள் முதலிடம், இரட்டை கம்பு போட்டியில் இரண்டு இடங்கள் மூன்று பேர் இடம் பிடித்து சாதனை படைத்தனர் 24 , பேருக்கு இளைஞர்கள் விளையாட்டு சான்றிதழ்கள் பார்ம் .1, பதக்கம் டி, சட், ஆகியவை வழங்கப்பட்டது.


மேலும், பயிற்சியாளர்கள் கவுசீக் ஆகியோருக்கு சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் சாதனை படைத்த மாணவ – மாணவிகளுக்கு தாழையாத்தம் சிலம்பம் போர்ட் கிளப் தலைமை பயிற்சியாளர் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி . இன் / 8939476777
