தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னையில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் "வெற்றிப்பயணம்" திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து ,
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் " வெற்றிப்பயணம் " பேருந்து சேவையை பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்ததாவது :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் 320 புறநகர் பேருந்துகளில் 174 பேருந்துகள், மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் ” வெற்றிப்பயணம் ” பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் பயணம் மேற்கொள்ளும் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையைப் பயன்படுத்தி பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் , இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது அன்றாட பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காகப் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

பின்னர், ” வெற்றிப்பயணம் ” திட்டத்தை தொடங்கி வைத்து, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண சீட்டுகளை வழங்கி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் , தமிழ்நாடு போக்குவரத்துக்கழக மேலாளர் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழகத்தினர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
