தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று போக்குவரத்து துறை சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், வேடங்கிநல்லூர் பகுதியிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கவிதா, அவர்கள் வெற்றி பயணத் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மகளிருக்கு விலையில்லா பயணச்சீட்டினை வழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பயணிகளுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் திருவள்ளூர் மண்டலத்தில் தினசரி இயக்கப்படும் நகரம் மற்றும் புறநகரப் பேருந்துகள் மொத்தம் 232 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே மகளிர் பேருந்து நகரத்தடம் – 72 இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அக்டோபர் 02 முதல் கூடுதலாக நகரம் மற்றும் புறநகரப் பேருந்துகள் 62 வெற்றி பயணமாக திருவள்ளூர் மண்டலத்தில் இயக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஆக மொத்தம் 134 பேருந்துகள் வெற்றிப் பயணமாக திருவள்ளூர் மண்டலத்தில் இயக்கப்படும் .

ஏற்கனவே மகளிர் பேருந்து நகரத்தடம் 72, அக்டோபர் 02 முதல் கூடுதலாக வெற்றி பயணமாக இயக்கப்படும் பேருந்துகள் 62 ஆகமொத்தம் வெற்றி பயணமாக இயக்கப்படும் பேருந்துகள் 134 மீதமுள்ள பேருந்துகள் வெளி மாநில பேருந்துகள் (INTER STATE) 90, 80 கிலோமீட்டருக்கு மேல் தொலைதூரம் இயக்கப்படும் பேருந்துகள் 08 ஆகமொத்தம் பேருந்துகள் 232 என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.பி.பவித்ரா,இ.ஆ.ப., உதவி இயக்குநர் (பயிற்சி) திருமதி.கே.சாகித்யா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் திரு.வெங்கடேசன், கிளை மேலாளர், தகுதி சான்று பிரிவு உதவி பொறியாளர், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், பயண சீட்டு பரிசோதகர்கள், போக்குவரத்துக் கழக பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் : மாளி.மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777
