திருச்சி, உறையூர் சேஷா ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ஸ்ரீ சக்கரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் இரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம் சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில் நடைபெற்றது .சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார்.
முதுகலை கணித ஆசிரியர் ஸ்ரீதர், உடற்கல்வி ஆசிரியர் கல்பனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் சங்க வட்டார தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் ஹேமலதா, சங்க சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவம் யோகா மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கௌதம் பேசுகையில், உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

உயர் ரத்த அழுத்தம், பெரும்பாலும் அமைதியான உயிர்கொல்லி” என்று அழைக்கப்படுகிறது. இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படா விட்டால் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றார். தொடர்ந்து இரத்த அழுத்தம் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களின் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தேவையான தகவல்களை வழங்கினார். நிறைவாக திட்ட உதவி அலுவலர் மாணிக்கம் நன்றி கூறினார்.

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed