ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் , சுகாதாரக் குழு கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், 97 இசல்ட்பிஆர் பணிகளில் 94 பணிகளும், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 801 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளில் 795 பணிகளும், நகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 21 ஓஹெச்டி பணிகளில் 20 பணிகளும் நிறைவடைந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், 2,306 கிராமங்களில் இதுவரை 229 கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைந்துள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது என தெரிவித்ததுடன், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சென்றடையும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
மேலும், ஊரகப் பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் , பொது இடங்களில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து, மக்காத குப்பைகளை சேகரித்து சம்பந்தப்பட்ட குப்பை வாங்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக விற்பனை செய்யவும், ஊராட்சிகளில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது இடங்களில் குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தவிர்க்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் , டிடபிள்யூஎடீ செயற்பொறியாளர் , வனத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஐசிடீஎஸ் திட்ட அலுவலர் , ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், நகராட்சி , பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

