கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலில் இன்று மதியம் பெய்த கனமழையால் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகராஜா கோயில் பின்வாசல் பகுதியில் உள்ள பெருமாள் மண்டபம் முன்பு கழிவுநீர் ஓடை முழுவதுமாக நிரம்பி காணப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கழிவுநீர் தேக்கத்தால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, கழிவுநீர் ஓடையை உடனடியாக சுத்தம் செய்து, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777
