ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து விமர்சனம் -அண்ணாமலை
சட்டமன்றத்தில் பேசக்கூடிய விஷயமா அது தான் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் ஒவ்வொரு உறுப்பினர்களும் காண்பித்துக் கொள்கிறார்கள் – அண்ணாமலை
இங்கு எல்லா மதமும் சமம் தான் – அண்ணாமலை
நாம் ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலைத்துறை என்னும் அமைப்பை எடுப்போம் உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் நிகழ்வை பற்றி சொல்லலாம் காவேரி சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பது போல கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்கிறார்கள் – மதுரையில் அண்ணாமலை பேச்சு
வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் சொல்ல முடியாத அளவுக்கு மனிதக் கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் தேங்கிக் கிடந்தன. வீ தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொண்ட தூய்மைப் பணியின் மூலம் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றால் இதுபோன்ற களப்பணிகள் நடைபெற வேண்டும். வெறும் வாய்ப்பேச்சால் எந்த மாற்றமும் ஏற்படாது. அனைவரும் பேசலாம்; பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தலாம். ஆனால், வைகை ஆற்றின் 33 ஏக்கர் பரப்பை முழுமையாக சுத்தப்படுத்த அரசு அனுமதி வழங்கி, அதற்கான பணிகளை மேற்கொள்ளும்போதுதான் உண்மையான ஈடுபாடு வெளிப்படும்.
வீடுகளில் இருந்து தினமும் மனிதக் கழிவுகள் ஆற்றில் கலப்பதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீ தி லீடர்ஸ் சார்பில் மனு அளித்தும், அந்தக் கழிவுநீர் கலப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
2014 முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய அரசு மதுரைக்காக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி வைகை ஆற்றை சுத்தப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார். ஆனால், அந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை என்பது தற்போது தெரியவருகிறது.
“எங்களது நோக்கம் புதிய அரசியலை எழுச்சியுடன் முன்னெடுத்து, தமிழகத்தில் அடிப்படை மாற்றத்தை உருவாக்குவதுதான். நமது காலத்திலேயே அந்த மாற்றத்தைப் பார்க்க வேண்டும். வைகை ஆற்றில் 163 டன் குப்பைகளை அகற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி”. உலக பொருளாதாரத்தில் மேலோங்கி இருக்கும்போது எதற்கு லண்டன் செல்ல வேண்டும், உள்ளூரில் உள்ள தொழிலை மேம்படுத்துங்கள்
லண்டன், நியு யார்க் போறேன் என்ற பழைய அரசியலை தமிழக அரசு கைவிட வேண்டும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் புதிய அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க வேண்டும், நாம ஆட்சிக்கு வந்தாலும் ஒராண்டு காலம் அவகாசம் வேண்டும், அரசியல் பேச வேண்டாம் நினைத்தாலும், மதுரைக்கு வந்தாலே அரசியல் பேசி விடுகிறோம் மேலும், ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் 10 லட்சத்து 17 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், ஜூன் 5-ம் தேதி தொடங்கிய 15-வது நாளில் வீ தி லீடர்ஸ் அமைப்பில் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 5 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் எந்த அரசியல் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர்களாக இல்லை என்றும் கூறிய அண்ணாமலை, “வைகையில் குப்பைகளை அகற்றுவது போல தமிழகத்தில் உள்ள அரசியல் குப்பைகளையும் அகற்ற வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது”.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மதுரை சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்து பேசியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “ஜல்லிக்கட்டு விளையாட்டால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாக அவர் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்”.
அதே நேரத்தில், அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக தரம் உயர்த்துவோம் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், இரு நிலைப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜல்லிக்கட்டு குறித்து எம்.எல்.ஏ. பேசியபோது முதலமைச்சர் தலையிட்டு அவரைத் தடுத்து, உட்காருமாறு கூறியிருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
நாம் எல்லோரும் எப்படி தலைவர்கள் என்று திருமாவளவன் கேட்கிறார்
திருமாவளவனை பொறுத்தவரையில் ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும், ஒரு குடும்பம் பிள்ளைகள் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் We the leaders என்பது ஒரு புரட்சி, நாம் எல்லோரும் சமம் என்பதை விட நாம் எல்லோரும் தலைவர்கள் என்கிறோம்”. என்றார். சட்டமன்றத்தில் பேசக்கூடிய விஷயமா அது தான் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் ஒவ்வொரு உறுப்பினர்களும் காண்பித்துக் கொள்கிறார்கள்
இங்கு எல்லா மதமும் சமம் தான்.
நாம் ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலைத்துறை என்னும் அமைப்பை எடுப்போம் உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் நிகழ்வை பற்றி சொல்லலாம் காவேரி சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பது போல கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்கிறார்கள்.
முதல்வர் லண்டன் போனதை பற்றி நான் பேசவில்லை. அவர் லண்டன் போக வேண்டாம் என்று தான் சொல்வேன்.ஏற்கனவே லண்டன் Dead Economy ல் உள்ள போது அவர்களிடம் பணம் கேட்டால் எப்படி தருவார்கள்?
அவர்களே நான்கு பேரிடம் பணம் கேட்டு வருகிறார்கள்.முதல்வர் விஜய் எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதை விட்டுவிட்டு இண்டிகோ விமானத்தில் கோவை, மதுரைக்கு வந்து தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.

கோவை, மதுரை, தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை தொடங்கலாம்.முதல்வர் லண்டன் விமானத்தை எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்கிறார்கள்.அதை பார்க்கும் போது, ” நைட்டு புல்லா இந்த பொம்மைய தான் ஒட்ட வைத்தியா? என்ற விவேக் பட காமெடி டயலாக் தான் ஞாபகம் வருகிறது.
இந்தியா 4.1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியில் உள்ளது, லண்டனில் 3.4 டிரில்லியனாக பொருளாதார வளர்ச்சி உள்ளது.
ஆனால், அங்கு சென்று அவரை பார்த்தோம், இவரை பார்த்தோம், எட்டிப் பார்த்தோம் என்று பேசிக்கொண்டுள்ளார்கள், உள்ளூர் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளார்கள். UK வில் கடந்த 10 ஆண்டுகளில் 7 பிரதமர்கள் மாறியுள்ளார்கள். அங்கு பொருளllதாரம் நிலையாக இல்லை. முதலீடுகளை ஈர்க்க லண்டன், சிங்கப்பூர், மலேஷியா செல்வதெல்லாம் தமிழ்நாட்டில். தவிடு பொடி ஆகிவிட்டது. உள்ளூர் பொருளாதாரத்தை சந்தைப்படுத்த முயற்சி எடுங்கள். கோவை, மதுரை சென்று பொருளாதாரத்தை உயர்த்துங்கள்.
என்றார்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி. இன் / 8939476777
