மதுரை மாவட்டம் செல்லூர் மணவாளன் நகர் பிரதான சாலை பகுதியில் செல்வம் என்கின்ற கூலித்தொழில் இன்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இரும்பு கம்பியில் பதிக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை மூடி செல்வம் நடந்து சென்று கொண்டிருந்த போது கால் உள்ளே மாட்டிக்கொண்டது. அவர் எவ்வளவோ முயற்சித்தும் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களும் கால்களை எடுப்பதற்கு முயற்சி செய்த போதும் காலை எடுக்க முடியவில்லை.

இது குறித்து, தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரும்பு அறுக்கும் எந்திரம் கொண்டு சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போராடி இரும்பு ராடை வெட்டி எடுத்து அவரை கால்களை வெளியே எடுத்தனர்.

இதனால் ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினரின் துரித செயல்பாட்டினால் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர் இதுபோன்ற கால்கள் மாட்டும் அளவுக்கு பாதாள சாக்கடை மூடிகளை சரியாக பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed