கிருஷ்ணகிரி வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வட்டார போக்குவரத்துஅலுவலர் ஈஸ்வரன் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், வட்டாரப் போக்குவரத்தின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது …..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சாலை விபத்துக்கள் நடக்கும் மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது. எனவே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுகின்ற வகையில் அடிக்கடி சாலை விபத்து தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கிருஷ்ணகிரியில் அதிக அளவில் ஆட்டோ களில் பள்ளி மாணவ மாணவிகளை அமர்த்திஅதிக வேதத்தை கடைபிடித்து ஓட்டுவதால் விபத்து ஏற்படுவது என்பதால் அனைத்து ஆட்டோக்களையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் தனியார் பேருந்துகள் அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தொகை கட்டாமல் இருப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள் அதிக சத்தம் எழுப்பும் கருவியை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு மிக இடைஞ்சல் ஏற்படுகிறது. இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகளில் கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து ஏற்படுகிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு சமூக நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பேசினார்.

கூட்டத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் – சதீஷ்,மாநில மகளிர் செயலாளர் பத்மா, மாவட்டத் தலைவர் சிவசக்திவேல், மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரேசன், மாவட்ட செயலாளர் மாதேஷ், மாவட்ட இணை செயலாளர் தில்லை ராஜா, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி சரண்யா, சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஜெய்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
